நம்மால் முடியும் !

மக்கள் சக்தி இயக்கம்
நிறுவனர் : டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி
மாநிலத்தலைவர் : மரு.த. இராசலிங்கம்
தலைமையகம் : 4/16 இராம் நகர், தூத்துக்குடி , 628002

|இயக்கம் ஒரு அறிமுகம்

டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் உயரிய சிந்தனையால் 1988-ஆம் ஆண்டு மே. 29-ஆம் நாள் மக்கள் சக்தி இயக்கம் துவங்கப்பட்டது. மக்கள் சக்தியை இயக்கமாக்கிய வரலாற்றுப் பெருமை டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களையே சாரும். சுயவளர்ச்சி, சுயபொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய ஈடுபாடு என்ற லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இது எனது கிராமம், எனது நாடு என்ற உணர்வோடு நேர்மையான வழியில் கடமை உணர்வோடு ஒவ்வொருவரும் ஆக்க பூhவமான மனமாற்றத்திற்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக, பொருளாதார வளர்ச்சிக்காக நமது இயக்கம் இருபத்தைந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நல்லவர்களே ஒன்று சேருங்கள்! இது நம்மால் முடியும்! என்ற முழக்கமே நமது இயக்கத்தை இயக்கி வருகிறது.

இந்திய நதிகளை இணைக்கும் பெரிய திட்டத்தையும் முதற்கட்டமாக தென்னக நதிகளை இணைக்கும் கருத்தையும் பரப்ப, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க பல முயற்சிகளை மக்கள் சக்தி இயக்கம் எடுத்துள்ளது.

  1. மக்களிடையே நதிகள் இணைப்பின் முக்கயத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் 1991-ஆம் ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை 1030 கி.மீ டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி தலைமையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 1995-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் நாள் சென்னையில், “நதிகள் இணையும் புதிய இந்தியா” எனற தலைப்பில் மாபெரும் மாநாட்டை மக்கள் சக்தி இயக்கம் நடத்தியது.
  2. தமிழ் நாட்டின் நீர் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியாக மேற்கு கடலில் வீணாக கலக்கும் நீரை தமிழகம் திருப்ப கோரி, 1992-ஆம் ஆண்டு நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை நடைப்பயணம் நடத்தப்பட்டது.
  3. 1993-ல் பாண்டியாறு - புன்னம்புழா நதிநீர் இணைப்பு கோரி, ஈரோட்டிலிருந்து கோவை வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
  4. 1994-ல் பாலாறு – வீராணம் இணைப்பு கோரி வேலூரிலிருந்து சிதம்பரம்; வரை நடைப்பயணம் நடத்தப்பட்டது.
  5. 1998-இல் அத்திக்கடவு – அவினாசி வெள்ளக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி டாக்டர். உதயமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னிமலையிலிருந்து வெள்ளியங்காடு வரை ஊர்தி பரப்புரை மேற்கொள்ளப் பட்டது. ஆக தமிழக நதி நீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக 2500 கிலோ மீட்டர் நடைப்பயணத்தை இயக்கம் மேற்கொண்டுள்ளது.

டாக்டர். உதயமூர்த்தி அவர்களுடைய சமுதாயப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் நடிகர் கமலஹாசன் அவர்களை கதாநாயகனாக வைத்து ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற திரைப்படத்தை எடுத்தார். இது தமிழக இளைஞர்களிடத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்ற, கூற்றின்படி கிராம முன்னேற்றத்திற்காக ‘கிராம மறுமலர்ச்சி’ என்ற திட்டத்தை இயக்கம் அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அந்த கிராமங்களில் பொருளாதார முன்னேற்றம், மது விலக்கு, லஞ்ச ஒழிப்பு, சுற்றுச் சூழல் போன்ற துறைகளில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இளைஞர்கள்தான் நாட்டின் முக்கியசக்தி, சொத்து என்ற அடிப்படையில் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் கல்வி, சுயதொழில், ஊரக, அரசாங்க செயல்பாடுகள் போன்;றவற்றில் பயிற்சிகள் இயக்கத்தால் அளிக்கப்படுகின்றன. இதனால் கிராமப்புற இளஞைர்கள் இது என்னால் முடியும் என்ற உணர்வோடு தன்னம்பிக்கை பெற்று சுய தொழில்களைச் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகும்.

பல்வேறு சமுதாயப் பணிகளில்; இயக்கம் ஈடுபட்டாலும் எதிர்காலத்தில், தமிழக நதிகளை இணைத்தல், கிராம முன்னேற்றம், பூரணமதுவிலக்கு ஆகியவற்றிற்கு அதிக கவனம் செலுத்தி செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

எதிர்காலத்தில் தமிழக மக்களுடை நம்பிக்கையை பெற்று மக்களின் மனசாட்சியாக இயக்கம் செயல்படவும், நம் நாட்டு முன்னேற்றத்திற்காகவும், நல்லவர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.

நாம் இல்லையென்றால், யார்? இப்பொழுது இல்லையென்றால், எப்பொழுது? வாருங்கள் சாதி, மத, இன, மொழி, கட்சி வேறுபாடின்றி சமுதாய நலன் என்ற அடிப்படையில் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். நல்லவர்கள் ஒன்று சேர்ந்து நிச்சயமாக நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்!

இது நம்மால் முடியும்
நாம் இணைந்து செயல்படுவோம்
விரைந்து செயல்படுவோம்
உயர்வோம்! உயர்த்துவோம்!
ஓங்குக மக்கள் சக்தி

குறிக்கோள்:

தமிழர்தம் அறிவுக்கும் திறனுக்கும் ஏற்ற உன்னதமான தமிழ்ச்சமுதாயத்தைப் போற்றிப் பாதுகாப்பதே இயக்கத்தின் குறிக்கோளாகும்.