நம்மால் முடியும் !

மக்கள் சக்தி இயக்கம்
நிறுவனர் : டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி
மாநிலத்தலைவர் : மரு.த. இராசலிங்கம்
தலைமையகம் : 4/16 இராம் நகர், தூத்துக்குடி , 628002

|செயல்திட்டங்கள்

  • மாணவர்கள்-இளைஞர்களுக்கு பயிற்சி: மாணவர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர்ந்து தனக்கும் தன்குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் பயனுள்ளவர்களாக வாழ ஆளுமை பயிற்சியளித்தல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் முனைவோருக்கு பயிற்சியளித்தல்.
  • நீர்மேலாண்மை: வேளாண் தொழிலைப் பாதுகாக்க நீர்நிலைகளைப் பராமரிக்கவும், தமிழக ஆறுகள் இணைப்புக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தல்.
  • கல்விசீர்திருத்தம்: ஒழுக்க நெறியுடன் கூடிய அறம் சார்ந்த கல்வியை, சம வாய்ப்பளிக்கும் வணிக நோக்கமில்லாக் கல்வி கட்டமைப்பை தொடர்ந்து வலியுறுத்துதல்.
  • கிராமங்கள் தன்னிறைவு: அனைத்து வகையிலும் தன்னிறைவுப் பெற்ற மாதிரி கிராமங்களை உருவாக்குதல்.
  • முழுமையான மதுவிலக்கு: பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க, மது மற்றும் போதைப் பொருள் இல்லாத சமுதாயம் காண பாடுபடுதல்.
  • மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பட்ட நி;லையில் பொதுமக்களின் நன்மைக்காகச் செயல்பட வழிவகை காணுதல்.
  • மக்களாட்சியில் குறைகள் கண்டவிடத்து, அவற்றைக் களைய அறவழியில் முயற்சி மேற்கொள்ளுதல்.
  • மக்களாட்சியை வலுப்படுத்தி, அரசியல், சமுதாய விழிப்புணர்வை எல்லா மட்டத்திலும் ஏற்படுத்துதல்.