நம்மால் முடியும் !

மக்கள் சக்தி இயக்கம்
நிறுவனர் : டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி
மாநிலத்தலைவர் : மரு.த. இராசலிங்கம்
தலைமையகம் : 4/16 இராம் நகர், தூத்துக்குடி , 628002

|கொள்கைகள்:

  • இந்தியா ஒரு விவசாய நாடு, இதைக்கருத்தில் கொண்டு விவசாயிகளுடைய நலனுக்காகவும், விவசாய வளர்ச்சிக்காகவும் பாடுபடுதல்.
  • மக்களாட்சியில் குறைபாடுகள் கண்டறிந்து நேர்மையான முறையில், அகிம்சை வழியில், அவற்றை அகற்ற முயற்சி எடுப்பது.
  • அரசியல், சமூக, பொருளாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
  • பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க, ஆவன செய்வது.
  • மக்களாட்சியை வலுப்படுத்தி, வளர்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல்.
  • தொழில், உற்பத்தித் திறனை பெருக்க மக்கள் சக்தியை பயன்படுத்தல்.
  • தனிமனித வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தேவையான, நாட்டுப்பற்று மற்றும் ஒழுக்க நெறியோடு கூடிய, கல்வித் திட்டத்தை உருவாக்குதல்.
  • மகளிர் கல்வி கற்று, வேலை வாய்ப்புகள் பெற்று ஆண்களுக்கு சமமாக உரிமையோடும், மரியாதையோடும் வாழ வழிவகை செய்வது.
  • சாதி, மத, இன, மொழி, கட்சி வேறுபாடின்றி மனிதனை மனிதனாக மதிக்கின்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபடுதல்.
  • பொதுவாழ்வில் ஊழலை எல்லாவகையிலும் நீக்க முயற்சி எடுத்தல்.
  • சட்டம், ஒழுங்கு, நீதி இவை மேம்பட்ட நிலையில் சுதந்திரமாய் பொதுமக்களது நன்மைக்காக – செயல்பட வழிகாணுதல்.
  • நாமே எடுத்துக்காட்டாக நெறிகளுடன் வாழ்ந்து காட்டுதல்