நம்மால் முடியும் !

மக்கள் சக்தி இயக்கம்
நிறுவனர் : டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி
மாநிலத்தலைவர் : மரு.த. இராசலிங்கம்
தலைமையகம் : 4/16 இராம் நகர், தூத்துக்குடி , 628002

|இலட்சியங்கள்:

  • சுய வளர்ச்சி
  • ஓவ்வொருவரும் உண்மை, நேர்மை, கடமையுணர்வு, மற்றவர்களை மதிக்கும் மனப்பான்மை, தியாக உணர்வு போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், தனிமனித ஒழுக்கமும், பண்பும் ஒரு ஒழுக்கமான, நெறியான சமுதாயத்தை உருவாக்கும். துனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் இதுவே அடிப்படை. உழைப்பின் மீது நம்பிக்கை, திறமை, அறிவு, தன்னம்பிக்கை, மனஉறுதி, முடிவெடுக்கும் திறன் ஆகியவைகளை வளர்த்துக்கொள்ளுதல், தனிமனித மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம்.

  • சுயபொருளாதார மேம்பாடு:
  • நேர்மையான வழியால்தான் நல்ல முடிவுகளை அடையமுடியும் என்ற காந்தீய வழியில் நம்பிக்கை வைத்து பணியாற்ற வேண்டும். தொழில் முனைவோராக செயல் பட வேண்டும். குறிக்கோளை நோக்கி, தன்னம்பிக்கையோடும், ஈடுபாட்டோடும், நேர்மையாக, திட்டமிட்டு தொடர்ந்து உழைப்பதே சுய பொருளாதார மேம்பாட்டிற்கான வழியாகும்.

  • சமுதாய ஈடுபாடு:
  • தனி மனிதன், சமுதாயத்தின் ஓர் அங்கம். தான் வாழ்கின்ற சமுதாயத்திற்கு, தன்னை வளர்க்கின்ற சமுதாயத்திற்கு, தான் பணியாற்ற வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை. தன்னுடைய வருமானத்தில், நேரத்தில் ஒரு பகுதியை அவன் சமுதாயத்திற்கு தந்தாக வேண்டும். இந்த வகையில் ஒவ்வொருவரும் சுயநலமின்றி, சமுதாய உணர்வின் அடிப்படையில், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும்போது, ஓர் உன்னதமான சமுதாயம் உருவாகிறது.